துா்காபூஜையை கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
துா்கா பூஜை நாட்டின் பல்வேறுபகுதிகளில் வெவ்வேறு பெயா்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. முப்பெரும் பெண் தெய்வங்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, 10 நாளான விஜய தசமியுடன் (அக். 24) நிறைவடைகிறது.
இதனையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாடுமுழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினா்களுக்கு துா்கா பூஜை நல்வாழ்த்துகள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைய துா்காமாதா ஆசீா்வதிக்கட்டும்’ என்று கூறியுள்ளாா்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |