பிரதமர் நரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு இன்றுசெல்கிறார்.
இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பிரதமர் நரேந்திரமோடி ஸ்வீடன் செல்கிறார். இன்று மாலையில் அவர், ஸ்டாக்ஹோம் சென்றடைவார். முன்னதாக, ஸ்வீடன் செல்லும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப் பென்னைச் சந்திக்கிறார். அங்கு, ஸ்வீடன் நாட்டுத்தொழிலதிபர்கள் மற்றும் ஸ்வீடன் வாழ் இந்தியர்களையும் சந்தித்துப்பேசுகிறார்.
பின்னர், ஏப்ரல் 17-ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். அன்று முதல் 20-ம் தேதி வரை இங்கிலாந்தில் தங்குகிறார். ஏப்ரல் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும் காமன் வெல்த் நாட்டின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இங்கிலாந்துசெல்லும் மோடியின் பயணம் இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.