குடும்ப அரசியலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்தது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து பாஜக தேசியதலைவர் அமித் ஷா பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “வளர்ச்சியை மையமாகவும், நோக்கமாகவும் கொண்டு பாஜக தலைமை யிலான அரசு செயல்பட்டுவருகிறது. மக்கள் வாழ்க்கைத்தரம் உயர அரசு பாடுபட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் மூலம் பாஜக தலைமையிலான அரசு தனது அரசியல் மனோ பலத்தை, எதிரி நாடுகளுக்கு உணர்த்தியது. குடும்ப அரசியலுக்கும், ஜாதி அரசியலுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முற்று புள்ளி வைத்தது. வளர்ச்சி அரசியலை தொடங்கிவைத்தது.
கறுப்புப்பண ஒழிப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று பாஜக 2014 தேர்தலின்போடு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவையும் (எஸ்ஐடி) அரசு அமைத்தது. மேலும் ராணுவ அதிகாரிகளின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த ஒருரேங்க் ஒருபென்ஷன் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டது.
கிராம வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி என்பதை மோடி தலைமை யிலான அரசு உணர்ந்துள்ளன. எனவே கிராம பகுதிகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.மோடி அரசின் திட்டங்களால் 22 கோடி ஏழைகுடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கான அரசு இது என்பதை உணரமுடியும். பலகட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சிக்குவரும் அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். அதனால் தான் 2014-ல் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மையை மக்கள் அளித்தனர்.
4 ஆண்டு காலத்தில் 7.25 கோடி கழிப் பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 5.22 கோடி குடும்பங்களுக்கு ஆயுள்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 31.52 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. பாஜக அரசின்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2019-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்குவரும்” என்றார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.