மதுரை தோப்பூரில், 1,264 கோடி ரூபாயில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது. 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன், கட்டுமானப்பணி, 48 மாதங்களில் நிறைவடையும். இங்கு, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான இடங்கள் அனுமதிக்கப்படும். கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு முழுவதும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கு உயர்தர சிகிச்சை வசதிகிடைப்பது மட்டுமின்றி, அதிக டாக்டர்கள், சுகாதார ஊழியர்களை உருவாக்க பயன்படும். இதற்கு, இன்று காலை, 11:30 மணிக்கு, மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில்,பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.அரசு மருத்துவகல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒருபகுதியாக, மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக் கல்லுாரிகளில், 450 கோடி ரூபாயில், கட்டப்பட்ட பல் நோக்கு உயர் சிகிச்சை பிரிவு களையும், பிரதமர் திறந்துவைத்தார்
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.