பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பீஹார் மாநிலம் தர்பங்காவில் ரூ.12,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். தர்பங்காவில் ரூ.1,260 கோடி மதிப்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் ரூ.5,070 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். எய்ம்ஸ் மருத்துவமனையால் மேற்குவங்கத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பலன் அடையும். எய்ம்ஸ் மருத்துவமனையால் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பீஹாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பின், நிலைமை மேம்பட்டது. பீஹார் மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மக்கள் நலனுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. எங்கள் அரசு எப்போதும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவே நிற்கிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவத் திட்டம் இல்லாவிட்டால், பலர் மருத்துவமனையை அணுக முடியாமல் அவதிப்பட்டு இருப்பார்கள். முந்தைய அரசுகள் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தன. பீஹாரில் முந்தைய அரசுகள் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை. நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இருப்பினும், எங்கள் அரசு நாட்டின் பல பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. இன்று நாட்டில் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. ஒருவர் தாய்மொழியில் மருத்துவக் கல்வி பெற்று டாக்டர் ஆகலாம் என்று எங்கள் அரசு முடிவு செய்தது.
முதல் கவனம் நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2வது நோயை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது. மூன்றாவது கவனம் மக்களுக்கு இலவச மற்றும் மலிவான சிகிச்சையைப் அளிக்க வேண்டும். நான்காவது கவனம் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதாகும். சுகாதார துறையில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |