கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சிலமாதங்களாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், அமெரிக்காவுக்கு செல்லும் முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது எனக்காகப் பிரார்த்தனைசெய்த அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசீர்வாதங்களால்தான் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறேன். உங்களின் தொடர் பிரார்த்தனையால் என் உடல்நிலை முற்றிலும் குணமடையும் என நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சொன்னது போலவே சிகிச்சை முடிந்து நாடு திரும்பியதும், மீண்டும் அரசுபணிகளில் ஈடுபட்டார். ஆனால், நீண்டநாள் நிலைக்கவில்லை. 63 வயதிலேயே மரணத்தை தழுவிவிட்டார்.
கோவாவின் முதல் பாஜக முதல்வராக மனோகர் பாரிக்கர் 2000-2005 மற்றும் 2012-2014-ல் மோடி தலைமையிலான அரசுவருவதற்கு முன்னரே முதல்வராக இருந்தவர். பின்னர், மோடி தலைமையிலான அரசின்கீழ் 2014-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பையும் பாரிக்கர் வகித்தார்.
முதலமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவிவகித்த மனோகர், எந்த இடத்திலும் அதிகார தோரணையில் நடந்து கொண்டது இல்லை.
நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி மாணவர் முதல்வரானார் என்ற பெருமையையும் மனோகர் பாரிக்கர் பெற்றார். 4 முறை முதல்வராக தேர்வாகியும் ஒருமுறை கூட ஐந்து ஆண்டுகளை இவர் நிறைவு செய்தது இல்லை.
2015-ம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது புனேவில், அவரது நண்பரின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனோகர்பாரிக்கர். பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று மணமேடைக்கு சென்று வாழ்த்துதெரிவித்தார். அவர் திருமணத்திற்கு வந்திருந்தது மணமேடையில் இருந்த குடும்பத்தினருக்கு, அப்போது தான் தெரியவந்தது. அந்த அளவுக்கு எளிமையானவர் மனோகர் பாரிக்கர்.
இந்தநிகழ்வை திருமணத்திற்கு வந்திருந்த கிரண் சிட்னிஸ் என்பவர் தனது முகநூல்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தான் இந்தவிஷயம் வெளி உலகுக்கு தெரியவந்தது. ஐ.ஐ.டி. பட்டதாரியான மனோகர் பாரிக்கர், விமானத்தில் எக்கானமிக் கிளாசில் பயணம் செய்வதை தான் விரும்பினார். அதேபோல், வெளியிடங்களுக்கு செல்லும்போது, கூடுமானவரை போலீஸ் பாதுகாப்பையும் தவிர்த்தார்.
ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற 42 ஆண்டுகள் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனையை ஒற்றை ஆளால் கோப்புகளை திரட்டி அதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று 35 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றுத் தந்தவர் மனோகர் பாரிக்கர்
அரசியல்வானில் விடிவெள்ளியாக திகழ்ந்த மனோகர். காற்றோடு கரைந்துவிட்டார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.