இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி அதன் மீது எருக்கன், இலை பழுப்பை அடுக்கி கட்டிகள் எழும்பி உள்ள குதிக்காலை அதன் மீது வைத்து சூடு தாங்கும்படி அதன் மீது அழுத்தி வைக்க குதிக் கால்கள் வலி மறையும்.
இலைச் சாற்றுடன் சிற்றாமணக்கு எண்ணெய் கூட்டிச் சீதபேதிக்கும், தேன் சேர்த்து வயிற்றில் உள்ள கிருமிகள் போகக் கொடுக்கலாம்.
இதன் சாற்றில் 2 முதல் 5 துளி, தேள், பாம்பு, விஷக்கடிகளின் வேதனை உள்ளோருக்கு உள்ளுக்குக் கொடுக்கலாம்.
இலையை உலர்த்திப் பொடி செய்து ஆறாத புண்களுக்கு போட சீக்கிரத்தில் ஆறும். உலர்ந்த பழுப்பை, பாறை உப்புடன் சேர்த்து வறுத்து முறித்த பாலுடன் கொடுக்க கல்லீரல், மண்ணீரல் வளர்ச்சியுறும் மகோதரம் தீரும்.
பூ ஒரு பங்கு இரண்டு பங்கு மிளகு ஒரு ½ பங்கு சேர்த்து அரைத்து, மிளகளவு மாத்திரை செய்து கொடுக்க கடின சுவாசகாசனம், உடனே தணியும்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.