உத்தரகாண்ட் கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நடந்தது. இறுதிகட்ட வாக்கு பதிவு நாளை நடக்கிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாரம்பரிய உடை அணிந்த நிலையில், கேதர்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
மோடியின் வருகையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கேதர் நாத் கோயிலைத் தொடர்ந்து பத்ரி நாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார்.
அதன் பின்னர் குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமிதரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானம்செய்தார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |