மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி

டில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார்.

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் (பிப்.,05) ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டில்லியில் நேற்று பா.ஜ., வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில் ஆம்ஆத்மி அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

இந்நிலையில், இன்று (பிப்.,03) டில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘ டில்லியில் நான் கேள்விப்பட்டேன். பாஸ் ஆவார்கள் என்று உறுதியாக தெரிந்த மாணவர்களை மட்டுமே 9ம் வகுப்புக்கு மேலே செல்ல ஆம் ஆத்மி அரசு அனுமதிக்கிறது. தேர்வு முடிவுகள் மோசமாக இருந்தால், அரசின் நற்பெயர் கெட்டுவிடும் என்று எண்ணுகிறார்கள்’ என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...