பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா!

ஜார்க்கண்டில் மாநிலக் கட்சியாக விளங்கிவந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா இன்று பாஜக.,வுடன் ஐக்கியமானது.

2000ம் ஆண்டில் புதிதாக உதயமான ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச் சரானவர் பாஜகவைச் சேர்ந்த பாபுலால்மாரண்டி. 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய இணையமைச்சராகவும் இருந்த மாரண்டி மாநில பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியை 2006ல் உருவாக்கினார்.

2009 சட்டமன்றதேர்தலில் 11 தொகுதிகளையும், 2014ல் 8 தொகுதியிலும், கடந்த ஆண்டில் 3 தொகுதிகளிலும் பாபுலால் மாரண்டியின் வந்த ஜார்க்கண்ட் விகாஸ்மோர்சா வென்றிருந்தது.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மாநில கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாயானது, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் பாஜக தலைமையுடன் ஏற்பட்டபிணைப்பின் காரணமாக தன்னுடைய கட்சியை மீண்டும் பாஜகவில் ஐக்கியமாக்கி யுள்ளார் பாபுலால் மாரண்டி.

ராஞ்சியில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொண்டு பாபுலால் மாரண்டியை வரவேற்றனர்.

ராஞ்சியில் உள்ள ஜகன்னாத்புர் மைதானத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் ஆயிரக் கணக்கான ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சாவின் இணைப்புகாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக பலம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

One response to “பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா!”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...