தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்துள்ளார் குடியரசு தலைவர். ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷணன் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
மஹாராஷ்ட்டிரா கவர்னராக இருந்த பகத்சிங் கோஷியாரி மற்றும் லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் தங்களை பொறுப்பில்இருந்து விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரியிருந்தனர். இதனையடுத்து மஹாராஷ்ட்டிரா மாநில கவர்னராக ரமேஷ் பையஸ் நியமிக்கப் பட்டுள்ளார். இதேநேரத்தில் தமிழக்தின் திருப்பூரை சேர்ந்தவரும், கோவை முன்னாள் எம்பியுமான சிபி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மொத்தம் 13 மாநில கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன்படி விவரம்வருமாறு:
ரமேஷ் பையாஸ் – மஹாராஷ்ட்டிரா
திரி விக்ரம் பர்நாயக் – அருணாசல பிரதேசம்
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல்நசீர் – ஆந்திரா
லட்சுமணன் பிரசாத் – சிக்கிம்
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் – பீஹார்
ஷிவ்பிரதாப் சுக்லா – ஹிமாச்சல்பிரதேசம்
குலாப்சந்த் கட்டாரியா – அசாம்
பிஸ்வாபூஷண் ஹரிச்சந்தன் – சத்தீஸ்கர்
பகுசவுகான் – மேகாலயா
சுஷ்ரிஅணுசுயா உய்க்கி – மணிப்பூர்
பிரிகேடியர் மிஸ்ரா- லடாக்
சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராகிறார்.
மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் நாகலாந்து மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.
சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இதனை எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழிகளில் செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன்.
பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |