இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், குழம்பு முதலியவைகளில் கறிவேப்பிலையைப் போல வாசனைக்காகப் போடுவது வழக்கம். துவையல் செய்து உண்ணலாம். வாயுவைப் போக்கும். பசி உண்டாகும். அஜீரணத்தை மாற்றும். தீனிப்பைக்கும், குடலுக்கும் வலிவு கொடுக்கும். விக்கல், குமட்டல் நீக்கியாகவும், மாதவிடாயை ஒழுங்கு படுத்தியாகவும் செயல்படுகிறது.
தேவையான அளவு புதினாக் கீரையை எடுத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து காலை, மாலை பல் துலக்கிவர சகல பல் கோளாறுகளும் குணமாகும். தேவையானால் எட்டில் ஒரு பங்கு உப்புச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
ஒரு சிலருக்கு பித்தம் காரணமாக அடிக்கடி குமட்டல் ஏற்படும். ஆனால் வாந்தி வராது. இதற்கு ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரை எடுத்து சட்டியிலிட்டு பாக்களவு இஞ்சித் துண்டும், 10 மிளகும் நைத்துப்போட்டு கீரையை வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு 100 மி.லியாக சுண்டக்காய்ச்சி 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து குமட்டல் வரும் சமயம் கொஞ்சம் கொடுத்துவர குமட்டல் குணமாகும்.
புதினாக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியிலிட்டு காலிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒரு சங்களவு காலை, மதியம், மாலையாகக் கொடுத்து வர வயிற்றுப்போக்கு, வாந்தி நின்றுவிடும்.
புதினாக் கீரையை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து சூரணமாக்கி காலை, மதியம், மாலையாக அரைத்தேக்கரண்டி சூரணத்தை தேனில் குலைத்துக் கொடுக்க தடைபட்ட மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.