திமுகவின் அரசியல் புரோக்கர் எஸ்ரா.சற்குணம்

தேர்தல் வந்தாலே, ஏதோ கிடைக்கும் காசுக்காக, பல பேருக்கு காசு வாங்கிக் கொடுப்பதற்காக, அரசியல் புரோக்கராக செயல்படும் எஸ்ரா.சற்குணம் அவர்கள், மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்பது, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். உலகமே போற்றுகின்ற உத்தமத் தலைவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, உங்களைப் போன்ற குள்ளநரி விமர்சிப்பது வேடிக்கையான ஒன்று.

குடும்ப அரசியலுக்கு கைக்கூலியாக வேலைபார்த்து, கிடைக்கும் பலனை அனுபவித்துக்கொண்டு, தமிழக மக்களையும், தன் மதம் சார்ந்த மக்களையும், தன் சுயநலத்திற்காக பொய்பிரச்சாரம் செய்து, ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு எவ்வளவு கேவலமானது என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

130 கோடி மக்களை வழிநடத்தும் பாரதப் பிரதமர் அவர்களை, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை திருப்திபடுத்த, எங்களது ஒப்பற்றதலைவரை, ஒருமையில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேபோன்று, இந்து சமுதாய மக்களை, பழக்கவழக்கங்களை எஸ்ரா.சற்குணம் பலமுறை பழித்துப் பேசியுள்ளார். பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வயதுமுதிர்ந்த நிலையில், அறிவுள்ள ஒரு மனிதருக்கு, நிதானம் இருக்கும், அனுபவம் இருக்கும், பொறுமை இருக்கும். இந்த மூன்றையும் இழந்த எஸ்ரா.சற்குணம் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தங்களை திருப்திபடுத்துவதற்காக எஸ்ரா.சற்குணம் போன்றவர்கள் தரம்தாழ்ந்து பேசுவதை, நடந்துகொள்வதை, மேடையில அமர்ந்திருந்த அரசியல் கட்சி தலைவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, வேதனையான ஒன்று. எஸ்ரா.சற்குணம் போன்ற அரசியல் புரோக்கர்களின் நடவடிக்கைகளை, மக்கள் உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறார்கள் இவர்களது மதம்சார்ந்த ஒருதலை பட்சமான விமர்சனங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் சேர்த்து மக்கள் தேர்தலில் தகுந்தபாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

டாக்டர் எல்.முருகன் 

மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...