சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. சாறாகக் குடித்தால் முழுப்பயனையும் பெறலாம்.
சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாரை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.
காய்ச்சலின்போது, வெறுமனே சாத்துக்குடி சாரைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத் தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.
குளிர்ச்சியான இனிப்பான பழம் சாத்துக்குடி. தாகத்தை தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல்,வாயு, இருமல் வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப் பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற காரணங்களுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத் தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.