வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். உடல் வலி நீங்கும். கருணைக் கிழங்கோடு சாப்பிட்டால் நல்ல உடல் வாகு ஏற்படும்.
வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து நீரில் ஊறவைத்துச் சாப்பிட
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிசல்
போன்றவை உடனே நீங்கும்.
வெந்தயத்துடன், சிறிது அளவு பெருங்காயத்தை போட்டு வறுத்து பொடிசெய்த பிறகு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் போட்டு பருகிவர வயிற்றுகோளாறுகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்டவை உருவாகாது .
மேலும் சர்க்கரைநோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் (அ) மோரில் கலந்து குடித்தால் சர்க்கரைநோய் கட்டுபாட்டிலிருக்கும். வெறும் வயிறில் இதனை குடிக்கவேண்டும்.
வெந்தய களி உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. கோடைகாலத்தில் உடல் சூட்டிலிருந்து தப்பிக்க வாரத்துக்கு ஒருமுறை வெந்தய களிசெய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கவும் வெந்தயம் பயன் படுகிறது. பிரசவமான பெண்கள கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் பால்_சுரக்கும்.
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், வெந்தயத்தின், மருத்துவ, வெந்தயத்தை , வெந்தயக் களி, குணம்,
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.