பிரதமர் பதவிக்கு என்னால் போட்டியிட இயலாது . அதற்கான அத்தனை தகுதிகளும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்டு . அவர் தான் இதற்கு பொருத்தமானவர் என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார் .
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர்
பதவிக்கு என்னால் ஒரு போதும் போட்டியிடமுடியாது. நான் அதற்கு பொருத்த மானவன் இல்லை. எனவே அநத் பதவிக்கு யாருடனும் நான் போட்டியிடவில்லை. நரேந்திரமோடி தகுதியானவர், திறமையானவர், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் .
பாரதிய ஜனதா தலைவராக எனது பதவி காலம் டிசம்பருடன் முடிவடைகிறது . மேலும் எனது பதவியை நீடிக்க நான் விரும்பவில்லை. சாதாரண தொண்டனாகவே கட்சி பணியாற்ற விரும்புகிறேன். கட்சி தலைவர்_பதவியை மோடி ஏற்றுகொள்ள நான் ஆதரிப்பேன்
அதேநேரத்தில் பாரதிய ஜனதா என்பது வாரிசுகளை திணிக்கும் கட்சியல்ல, அது யாரையும் நியமிக்காது. கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெறும் தலைவர் தான் பிரதமர்_வேட்பாளராக அறிவிக்கப்படுவார். என்னை பொறுத்தவரை பா.ஜ.க தலைவராகவும், பிரதமராகவும் சிறப்பாக_செயல்பட கூடிய தகுதி மோடிக்கு உண்டு என்று தெரிவித்தார் .
{qtube vid:=XPaRIiqlsTs}
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.