கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் உள்ள பெங்களூரு சர்வதேச கண் காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வாரவிழாவை, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராகஉள்ளது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். பெங்களூரு தொழில்நுட்பம் நிறைந்த நகரம். இந்திய ஏரிசக்தி வாரநிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறேன்.
சமீபத்தில் சர்வதேசநிதியம், 2023ம் ஆண்டுக்கான வளர்ச்சிகுறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தியாவேகமாக வளரும் பொருளாதாரம் நிறைந்தநாடாக இருக்கும் என கணிப்பு கூறுகிறது. கொரோனா தொற்று காலத்திலும், இந்தியா உலகளவில் பிரகாசமான இடத்தில்இருந்தது.
21ம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய ஆற்றல்வளங்களை உருவாக்குவதிலும், ஆற்றல் மாற்றத்திலும் இந்தியா உறுதியாக உள்ளது. எரிசக்திதுறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்தநாடாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பெங்களூருவில் பசுமை இயக்க பேரணியை பிரதமர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாலையில், தும்குரு மாவட்டம் குப்பி தாலுக்கா பிதரஹள்ளி கிராமத்தில் உள்ள இந்துஸ்தான் ஏரோ (எச்.ஏ.எல்) வளாகத்தில் அமைக்கபட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை ஆகும்.
* இந்த தொழிற்சாலை 615 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர்மோடி இங்கு அடிக்கல் நாட்டினார்.
* இந்ததொழிற்சாலையில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள 1000 ஹெலிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுக்குள், ரூ.4 லட்சம்கோடி மதிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* முதலில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்களும், அதைதொடர்ந்து 60 மற்றும் 90 ஹெலிகாப்டர்கள்வரை தயாரிக்க எச்ஏஎல் முடிவு செய்துள்ளது. ஆரம்ப முயற்சியாக, ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
* இந்த தொழிற்சாலையில் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், இந்திய பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் தயாரிக்கப்பட உள்ளன.
* அதிக திறன்படைத்த ஏற்றுமதி செய்யக்கூடிய, சிவில் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளன
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |