2024 அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-வின் முதல் 15 நாட்களிலேயே, மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. “நிலைத்தன்மை” என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் கீழ் ஐதராபாதில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, 12.10.2024 அன்று தொடங்கிவைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, எரிசக்திக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சுரங்க அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான, நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், 1.6 டன் அலுமினியக் கழிவுகளைப் பயன்படுத்தி, வியப்பூட்டும் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கலைப்படைப்பு தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 6-ல் உள்ள ராணி லட்சுமிபாய் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இது தவிர, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தூய்மை உணர்வை ஊக்குவிக்கும் முயற்சியாக, சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், புவி பாரம்பரிய மற்றும் புவி சுற்றுலாத் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிலுவையில் உள்ள கோப்புகளுக்குத் தீர்வு காண்பதிலும், சுரங்க அமைச்சகம், பொது மக்களின் 80% கோரிக்கைகளுக்கு 15 நாட்களில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளது.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |