இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. இதை உண்டு வந்தால், உடலைத் தேற்றி உரமாக்கிப் பலப்படச் செய்யும். இது காமத்தைப் பெருக்கும். இடத்தை முறைப்படி மருந்து செய்து உண்டால் மேக மூத்திரத்தை நீக்கும். வசியத்திற்கு உதவும். ஓடி கட்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.
இதன் இலைச் சாற்றைச் சீலைபுண்களிற் காய்ச்சி கட்டி வரக் குணமாகும். இதன் இலையை நீரில் காய்ச்சி அக்கஷாயத்தை இடுப்பு நோய்க்கும் குண்டிக்காய் வேதனைக்கும் ஒற்றடமிட வேதனை தணியும். இலையையும், வேரையும் உலர்த்தி, பொடித்துப் பாலில் 5 கிராம் சேர்த்துக் கொடுக்க மூலவியாதிகள் நீங்கும். வேர் ஒரு பங்கு தண்ணீர் 10 பங்கு முறைப்படி கஷாயமிட்டு 5,10 மில்லி கொடுத்து மூலநோய்கள் நீங்கி இரத்தம் சுத்தியாகும்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.