மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மின்சார அமைச்சகம் சிறப்புபிரச்சாரம் 4.0-ஐ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இது தூய்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அலகுகளில் நிலுவையில் உள்ள விஷயங்களை விரைவாக அகற்றுகிறது. அனைத்து அளவுருக்களின் இலக்குகளும் செப்டம்பர் 16 முதல் ஆயத்த கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு 30 செப்டம்பர் 2024 அன்று எட்டப்பட்டுள்ளன. எம்.பி.க்கள், பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்புகள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு பதில்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தூய்மை பிரச்சாரம், பதிவு மேலாண்மை, இடத்தை விடுவித்தல், வருவாய் ஈட்டுதல் போன்றவை இந்த அளவுகோல்களில் அடங்கும்.

செயல்படுத்தல் கட்டம் 2 அக்டோபர் 2024 அன்று தொடங்கியது. அது 31 அக்டோபர் 2024 வரை தொடரும். மின்சார அமைச்சகம் அதன் இலக்குகளை அடைவதில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 15 அக்டோபர் 2024 நிலவரப்படி, அமைச்சகம் ஏற்கனவே எம்.பி.க்களிடமிருந்து 42 குறிப்புகள் (58%), மாநில அரசுகளிடமிருந்து 16 குறிப்புகள் (27%) மற்றும் 3 அமைச்சகங்களுக்கு இடையிலான குழு  குறிப்புகளை (50%) அகற்றியுள்ளது. பொதுமக்கள் குறைகளைப் பொறுத்தவரை, அமைச்சகம் 177 குறைகளை (78%) 19 பொது குறை மேல்முறையீடுகளுடன் (50%) தீர்த்துள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 19,839 மற்றும் 4,937 கோப்புகளில் முறையே 13,377  கோப்புகள் மற்றும் 1,589 டிஜிட்டல் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இதில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் 9490 கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன, மேலும் 1581 மின்-கோப்புகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை மேலும் மேம்படுத்த 11 விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.கூடுதலாக, காலாவதியான மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் அமைச்சகம் 18,640 சதுர அடி இடத்தை விடுவித்துள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 346 இடங்களில் 79 இடங்கள் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டுள்ளதால், தூய்மை இயக்கமும் வேகம் பெற்றுள்ளது.  அமைச்சகம் 3,155 மெட்ரிக் டன் ஸ்கிராப்பை அப்புறப்படுத்தி, ரூ.1.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் நோக்கங்களை அடைவதற்கு மின்சார அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. செயலாளர்  தலைமையில். அக்டோபர் 2024 இறுதிக்குள் இயக்கத்தை வெற்றிகரமாக முடிப்பதை நோக்கிய தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக வழக்கமான மதிப்பாய்வுகள் நடத்தப்படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...