பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின், மற்றொரு தென் அமெரிக்க நாடான கயானாவுக்கு, இரு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். 56 ஆண்டுகளில், இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதன்முறை.
உற்சாக வரவேற்பு
தலைநகர் ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவரை, கயானா அதிபர் இர்பான் அலி, பிரதமர் மார்க் அந்தோணி பிலிப்ஸ் வரவேற்றனர்.
இதையடுத்து, இந்தியா – -கயானா இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு சான்றாக, ஜார்ஜ் டவுன் நகரின் சாவியை, அந்நகர மேயர் பர்னி ஜென்கின்ஸ் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை, கிரெனடா பிரதமர் டிக்கன் மிட்செல், பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஹோட்டலில் புலம்பெயர்ந்த இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |