ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம்

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கிடைத்த வெற்றி குறித்து, 70 நாடுகளிடம், ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் , 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் விமானப்படை தளங்களும் சேதம் அடைந்தன. பாகிஸ்தான் டிஜிஎம்ஓ கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், டில்லியில் 70க்கும் மேற்பட்ட நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ‘ ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், அதன் செயல்பாடு மற்றும் வெற்றி குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

டில்லியன் கண்டோன்மென்ட்டில் மானேக்ஷா மையத்தில், ராணுவ லெப்டின்ன்ட் ஜெனரல் டிஎஸ் ராணா, இந்த நடவடிக்கை குறித்துவிளக்கம் அளித்தார். சுவீடன், நேபாளம், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், பயங்கரவாத முகாம்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், தாக்குதல் குறித்தும் விளக்கப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக நடந்து வரும் பிரசாரம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...