தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட உதவும். மேலும் கோடைகாலங்கள் மற்றும் உடற் பயிற்சிசெய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைதடுக்கும்.
புரதச் சத்துக்கள் நிறைந்த மீன் வகை உணவுகளை நிறையசாப்பிடலாம். இதில் இருக்கும் Omega 3 Fatty Acid உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது . இதயத்திற்கும் இதமானது.
நம் நாட்டில் பொற்கொடி என்னும் பொற்றாலைப் பாவை என்னும்
கரிசலாங் கண்ணியை அடிக்கடிநெய், பருப்பு, சேர்த்து பொரியல், குழம்பு
கடையல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம்.
இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல் நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் தரும். உடல் கனமும்,
பருமனையும், தொந்தியையும் கறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல்
உணவில் இரண்டு முதல் நான்குவாரம் தொடர்ந்து உண்டுவர, நல்ல
பலனுண்டு.
வெள்ளை முள்ளங்கி, வாழைத் தண்டு இவைகளை பொடி பொடியாக நறுக்கி,
எலுமிச்சை சாறு, உப்பு இவைகளை சேர்த்து, பச்சையாக வெறும்வயிற்றில்
தொடர்ந்து சாப்பிட்டு வர, அங் கங்கே விழும் சதைமடிப்புகள் மறையும்.
வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக்
கொள்ள உடல் பருமன் குறையும்.
பாகற்காய், முட்டைக் கோஸ், கேரட், முருங்கை காய், வாழைத் தண்டு உள்ளிட்ட காய் கறிகளை அடிக்கடி சேர்த்துகொள்வது உடல் எடையைகுறைக்க உதவும்
உடல் எடை குறைக்க , உடல் எடை குறைய, உடல் கனம் குறைய ,
உடல் பருமமன் குறைய , தொந்தியையும் கறைக்க
You must be logged in to post a comment.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
3conditional