‘தனது வளமான பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்தியா பங்களிப்பு செய்தால் மட்டுமே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று உலகம் நம்புகிறது. அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை,’ என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், இன்று ‘இந்து சேவா மஹோத்சவ்’ துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
இந்தியா தனது சிறுபான்மையினரின் பிரச்னைகளைத் இருக்கும்படி பிற நாடுகளால் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் நிலைமையை நாங்கள் காண்கிறோம்.
உலக அமைதி குறித்து பேசி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி நடக்கிறது.
உலக அமைதி குறித்து பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் எங்கும் போர்கள் நின்றபாடில்லை. நம் நாட்டில் சிறுபான்மையினரைப் பற்றி நாங்கள் அடிக்கடி கவலைப்படுகிறோம், அதே நேரத்தில் சிறுபான்மையினர், வெளிநாடுகளில் என்ன மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்தியா பங்கு வகிக்காமல் உலக அமைதி சாத்தியமில்லை என்று நம் நாட்டிற்கு வெளியே நிறைய பேர் நினைக்கிறார்கள். இந்தியாவும் அதன் வளமான பாரம்பரியமும் மட்டுமே இதை செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 3,000 ஆண்டுகளாக இது நிரூபிக்கப்பட்டு வருகிறது. உலகின் இந்தத் தேவையை நிறைவேற்றுவது எங்கள் பொறுப்பு.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |