உறக்கத்தின் முக்கியத்துவம்

 மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு இன்பமாகும். எனவே ஆழ்ந்த உறக்கத்தில் எழுப்பக்கூடாது.

தூக்கம் வராமல் இருக்கின்ற இரவுகள், துன்பம் நிறைந்த இரவுகலாகும். எனவே குறித்த நேரத்தில் உறங்குவது அவசியமாகும். உறங்கும்போது தலையணை இல்லாமல் படுத்துறங்க வேண்டும். முடியாதவர்கள் ஓர் அங்குலம் முதல் மூன்று அங்குலம் வரை உயரம் உள்ள தலையணையைப் பயன்படுத்தலாம். 'இலவம் பஞ்சில் துயில்' என்பது அறிவாற்றல் மிக்க ஔவையாரின் வாக்கு.

ஒரு நாளைக்கு இருதயத்தின் இயக்கத்தைக் கணக்கிட்டு, ஒரு நாளை மூன்றாகப் பிரித்து, எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது அறிவாற்றல் மிக்க நம் முன்னோர்கள் கண்டுப்பிடிப்பாகும்.

உடலில் ஏற்பட்ட பல மாற்றங்களையும், நாடித்துடிப்பின் ஏற்ற இரக்கங்களின் செயல்பாடுகளையும் சமன்படுத்துவதுதான், ஆழ்ந்த உறக்கம், உடல் உழைப்பு, உணவு, மனநலம், வயது இவற்றைப் பொருத்து உறக்கம் அமைகின்றது.
இரவில் முறையாகத் தூக்கம் வராவிட்டால் பகலில் எதையும் முறையாகச் செய்ய முடியாது. கடுமையான உழைப்புக்குப் பின் உடலில் சக்தி குறைந்து அதற்கேற்றவாறு பலவீனமடைகிறது. அத்துடன், மூளைக்குச் செல்லும் சக்தியும் குறைகிறது.
வயதானவர்களுக்கு தூக்கம் மந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் தூக்கம் முறையாக இல்லாமை என்பது ஒரு நோயன்று. அது சில நோய்களுக்கான எச்சரிக்கையாகும். மனநோயின் ஆரம்ப அறிகுறிகளில் தூக்கமின்மை ஒன்றாகும். எந்த நோயின் ஆரம்பத்திலும் முதலில் துன்பப்படுவது தூக்கம்தான்.

பகல் உறக்கம் பலவித வியாதிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. எனவே, பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பின் வாழ்க்கையில் உள்ளவர்கள் உடல்நிலை காரணமாகப் பகலில் சிறிது நேரம் உறங்கலாம்.

தூங்கும்போது ஆண்கள் இடக்கைப்புறம் பக்கவாட்டில் படுத்துறங்க
வேண்டும். இடக் கையைத் தலைக்கடியில் வைத்து, பக்கவாட்டில் கால்களை நீட்டி, வலக் கையை வலத் தொடையின் மீது வைத்துப் படுக்க வேண்டும்.

பெண்கள் வலக் கைப்புறம் பக்கவாட்டில் படுத்துறங்க வேண்டும். வலக் கையைத் தலைக்கடியில் வைத்து, பக்கவாட்டில் கால்களை நீட்டி இடக் கையை, இடத் தொடையின் மீது வைத்துப் படுக்க வேண்டும்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...