அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, பல்கலை மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுதும் உள்ள, 171 அரசு கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு, 11 மாதம் என்ற ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் பல்கலை மானிய குழு பரிந்துரைக்கும் உதவி பேராசிரியர் கல்வி தகுதி பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர் சிறப்பு தேர்வு எழுதி, பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.
தற்போது, கவுரவ விரிவுரையாளர்கள் எவரையும், பல்கலை மானிய குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானிய குழு பரிந்துரைத்துள்ள மாதம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை, தி.மு.க., அரசு அளித்துள்ளது.
இதை கண்டித்து, தமிழகம் முழுதும் கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
உடனே, அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும். கடந்த, 2020 அரசாணையின்படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளர்களாக உள்ள தகுதி வாய்ந்தவர்களை, அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |