சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ரத்த செல்களில் ) உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகை ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு  பெண்கள், இரும்புசத்து குறைப்பாட்டினால் ஏற்படும் அனீமியா வால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.               

ரத்தசோகை வராமல் தவிர்க்க நாம் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும் குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த உணவுகளான தினசரி கர்ப்பிணி பெண்களும் அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, புதினா, அவல், கடலைப்பருப்பு, பூசணி விதை, உலர் பழங்கள் சோயா, பயிர் வகைகள், நண்டு, ஆட்டுஈரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இருமுறையாவது கீரை,காகறி, பழங்கள் கொடுக்கப்படவேண்டும்.

மேலும் நாம் உண்ணும் இரும்பு சத்துகள் உடலில் சேர வைட்டமின் சி  நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்கா, கொயா, முருங்கை கீரை, தக்காளி, முட்டைகோஸ் முளைக்கட்டிய பயிறுகள் ஆகியவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளல் அவசியம்.

சைவ உணவைவிட அசைவ உணவில் உள்ள இரும்பு சத்து உடலில் நன்கு சேரும். எனவே சைவ உணவை உண்பவர்கள் அதை ஈடு செயவேண்டியது அவசியம். தேவையான அளவு புரதமும், வைட்டமின் பி6, பி12  மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளுதல் அவசியம்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது கால்சியம் நிறைந்த உணவுகளையும் டீ,காபி போன்ற பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வகை உணவுகள் இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...