இந்தியாவில் எரிசக்தி துறையில் ஏராளமான வாய்ப்பு – பிரதமர் மோடி

இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரத்தின் மூன்றாவது பதிப்பின் தொடக்க விழாவில் உரையாற்றினார்.

அப்போது, இந்தியா தனது வளர்ச்சியை மட்டுமல்லாமல், உலகின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கிறது, அதில் எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் ஐந்து தூண்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. வளங்களை பயன்படுத்துதல், புத்திசாலித்தனமான மனங்களிடையே புதுமைகளை ஊக்குவித்தல், பொருளாதார வலிமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, எரிசக்தி வர்த்தகத்தை கவர்ச்சிகரமானதாகவும், எளிதாகவும் மாற்றும் மூலோபாய புவியியல் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகிய ஐந்து தூண்களின் மீது இந்தியாவின் ஆற்றல் லட்சியங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவைகள் இந்தியாவின் எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்றார்.

அடுத்த இருபது ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு முக்கியமானவை, அடுத்த ஐந்தாண்டுகளில் பல குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவோம். 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன், இந்திய ரயில்வேயின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைதல், ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட இந்தியாவின் பல எரிசக்தி இலக்குகள் 2030 காலக்கெடுவுடன் இணைக்கப்பட்டுள்ளன, இந்த இலக்குகள் லட்சியமாகத் தோன்றலாம், ஆனால் கடந்த பத்தாண்டின் சாதனைகள் இந்த இலக்குகள் அடையப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய சக்தி உர்பத்தி 32 மடங்கு அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி நாடாக மாற்றியுள்ளது.

ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ள இந்தியா, புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைந்த முதல் ஜி-20 நாடு இந்தியா.

தற்போதைய 19 சதவிகித எத்தனால் கலப்பு என்பது இந்தியாவின் அந்நியச் செலாவணி சேமிப்பு, விவசாயிகளின் கணிசமான வருவாய் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.

2025 அக்டோபர் மாதத்திற்குள் 20 சதவிகித எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எடுத்துரைத்த மோடி, இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில்துறை 500 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற நிலையான மூலப்பொருள்களுடன் விரைவான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது.

மேலும் இந்தியாவின் ஜி-20 தலைமையின் போது, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி நிறுவப்பட்டது. அது தற்போது 28 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கியுள்ளதாக வளர்ந்துள்ளது. இந்தக் கூட்டணி கழிவுகளை செல்வமாக மாற்றி, சிறப்பு மையங்களை அமைக்கிறது.

இந்தியா தனது ஹைட்ரோகார்பன் வளங்களின் திறனை முழுமையாக ஆராய்வதற்காக தொடர்ந்து சீர்திருத்தம் செய்து வருகிறது. முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவாக்கம் ஆகியன எரிவாயு துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும், இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரித்துள்ளது.

இந்தியா தற்போது நான்காவது பெரிய சுத்திகரிப்பு மையமாக உள்ளது, அதன் திறனை 20 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் வண்டல் படுகைகளில் ஏராளமான ஹைட்ரோகார்பன் வளங்களை கொண்டுள்ளன, அவற்றில் சில ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, மற்றவை ஆய்வுக்காக காத்திருக்கின்றன, இந்தியாவின் இந்த முக்கியத் துறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசு வெளிப்படையான நில உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்தைத் திறப்பது மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவது உள்பட அரசு விரிவான ஆதரவை வழங்கியுள்ளது.

எண்ணெய் வயல்களின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தற்போது பங்குதாரர்களுக்கு கொள்கை ஸ்திரத்தன்மை, நீட்டிக்கப்பட்ட குத்தகைகள் மற்றும் மேம்பட்ட நிதி விதிமுறைகளை வழங்குகின்றன.

இந்த சீர்திருத்தங்கள் கடல்சார் துறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை பராமரிப்பதற்கும் உதவும் என்று கூறினார்.

மேலும், இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் குழாய் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...