இந்தியா – சிலி இடையே விரிவான பொருளாதார நட்புறவு ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சைத் துவக்க, பிரதமர் நரேந்திர மோடி, சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட், ஐந்து நாள் பயணமாக டில்லிக்கு நேற்று வந்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தொழிலதிபர்களும் வந்துள்ளனர்.
டில்லியில் பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலக வரைப்படத்தில் வெவ்வேறு முனைகளில் இருந்தாலும், பல பெருங்கடல்கள் நடுவில் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை இயற்கை ஏற்படுத்தித் தந்துள்ளது.
பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன. ராணுவத் துறையில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இரு நாடுகள் இடையேயான உறவு வலுவடைந்துள்ளதையே காட்டுகிறது.
டிஜிட்டல் கட்டமைப்பு, எரிசக்தி, ரயில்வே, விண்வெளி ஆகிய துறைகளில், தனக்குள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது.
இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வளர்ச்சியை வரவேற்கிறோம். இதில் உள்ள அளப்பரிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார நட்புறவு ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுகளை துவக்கவும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
சிலியில் உள்ள அபூர்வ தாதுக்கள் வளத்தை பயன்படுத்துவது போன்றவற்றில் நம்முடைய உறவை வலுப்படுத்துவோம். வேளாண் துறை, உணவு பாதுகாப்பில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |