குஜராத்தின், ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் மோடியின் ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டதில் இருந்து, 60க்கும் அதிகமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில், சேவை கூட்டுறவு சங்கங்கள், முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உட்பட, இரண்டு லட்சம் முதன்மை கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோடி ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட, நாட்டில் இருக்க கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் மலிவு விலை மருந்தகங்களை திறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க்குகள், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோக ஏஜென்சி அமைக்கவும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மானிய விலையில் தானியங்களை வினியோகிப்பதிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தரமான விதைகள், ஏற்றுமதி மற்றும் இயற்கை வேளாண்மைக்கு தலா ஒன்று என மூன்று தேசிய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |