அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக மரத்தின் உள்பட்டை இவைகளையெல்லாம் அம்மியில் வைத்து அரைத்து, காலை, பகல், மாலை என்று மூன்று வேளை, நெல்லிக்காயளவு சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.
அருகம்புல்லை ஊறவைத்து கியாழம் வைத்து, பாலுடன் சேர்த்து உட்கொள்ள, மூல இரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். அருகம்புல்லை, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டிச் சாற்றைக் கண்ணுக்குள் பிழிய கண்நோய், கண்புகைச்சல் போகும்.
மூக்கிலிட இரத்த பீனிசமும், காமய்பட்ட இடத்தில் பூச, இரத்தம் வடிதலும் நிற்கும். புண்கள் மீது தடவ, புண்கள் ஆறும். வெள்ளிக்கிழமைகளில் 15 முதல் 30 மில்லி. குடித்து வர பெருச்சாளிவிடம் நீங்கும்.
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் தடவி வர சொறி, சிரங்கு, படர் தாமரை கிருமிரோகம், சீதபித்தம் நீங்கும்.
இதன் வேரை கணுக்கள் போக்கி 10 கிராம் எடுத்து அத்துடன் வெண்மிளகு 10 எடுத்து சேர்த்து, கஷாயமிட்டு வடித்து அதில் பாக்கு அளவு பசுவின் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள மருந்தின் வேகம், இரசவேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு (கல்) வெட்டை மூத்திர தாரை எரிச்சல் முதலியவை நீங்கும். பெரும்பாடு பூரணமாக குணமாகும்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.