ராணுவத்திற்கு உதவ தயார்

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர்.

நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, ‘டெரிடோரியல் ஆர்மி’ எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான முழு அதிகாரத்தை நம் ராணுவ தளபதிக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். தன்னார்வலர்கள் தேவை என்ற அறிவிப்பை தொடர்ந்து ”ராணுவத்திற்கு உதவ தயார்” என முழக்கமிட்டு சண்டிகரில் இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர்.

”நாங்கள் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறோம். ராணுவத்திற்கு உதவியாக, தன்னார்வலர்களாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்” என குவிந்த இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து, காலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். கூடியிருந்த இளைஞர்கள் அனைவரும், எதையும் கண்டுக்கொள்ளாமல் தேசத்திற்காக பணியாற்ற நாங்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...