இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கின்றன: முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் உறுதி

” இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கின்றன,” என முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்தாலும் ராகுல் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.

இதனையடுத்து இது குறித்து பிரமாணப்பத்திரத்தில் ராகுல் கையெழுத்து போட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவத்துள்ளது.

இதனிடையே கோவையில் நடந்த ‘ இந்தியா டுடே’ விவாத நிகழ்ச்சியில் முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது 2018 முதல் 2020ம் ஆண்டு வரை தேர்தல் கமிஷனராக இருந்த அசோக் லவாசா கூறியதாவது: இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடக்கிறது என கருதுகிறேன். கடந்த கால வரலாறு இதனை நிரூபிக்கும். ஓட்டுத் திருட்டு என்பது தேர்தலுக்காக எழுப்பப்படும் கோஷம் ஆகும். யாருக்கு யார் ஓட்டுப் போட்டார்கள் என தெரியாத போது, இந்த குற்றச்சாட்டை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஓபி ராவத் கூறுகையில், ” அரசியல் மோதல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் என்பது பொதுவான வழி. தேர்தலின் போது எதுவும் நடக்காது. அனைத்தும் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்ப்பது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு ஆகும். இந்தியத் தேர்தல்கள் தங்கத்தின் தரம் போல் கருதப்படுகிறது. மிகவும், நேர்மையான , சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மையான தேர்தல்கள் ஒன்றாக உலகின் பெரும்பான்மையான ஜனநாயகங்களால் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இவர் 2015 முதல் 2018 வரை தேர்தல் கமிஷனராகவும், 2018 ஜன.,21 முதல் டிச., 1 வரை தலைமை தேர்தல் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.

2010 முதல் 2012 ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பணியாற்றிய எஸ்ஓய் குரேஷி கூறியதாவது: ஓட்டுத் திருட்டு என்பது அரசியல் கோஷமாக பார்க்கிறேன். நேர்மையான தேர்தல் நடத்த சுத்தமான வாக்காளர் பட்டியல் தேவை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் நியாயமானவை. இந்தியாவின் தேர்தலுக்கும் மற்றும் அதன் ஒருமைப்பாட்டுக்கும் வாக்காளர் பட்டியல் தான் அடித்தளத்தை அமைக்கின்றன. வாக்காளர் பட்டியல் சுத்தமாக இருக்காத வரை, தேர்தல்களை நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருத முடியாது. 100 கோடி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக நடக்கின்றன. சில அரசியல் பிரச்னைகள் பெயரை கெடுக்கிறது. இதற்கு நாம் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...