நன்னாரியின் மருத்துவ குணம்

 நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்தக் கஷாயத்துடன் பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் விலகும்.

இதே கஷாயத்தைக் குழந்தைகளுக்குக் காலை, மாலை சங்களவு கொடுத்து வந்தால் கணைச் சூடு குணமாகும்.

இதன் சுவை இனிப்பும், சிறு கைப்பும் உடையது. இதைப்போட்டு நன்றாக வெந்நீரில் கொதிக்க வைத்து நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், உடல் வலுப்பெறும். உடலைத் தேற்றி வலு உண்டாக்கும். உடலைக் குளிற்சியடையச் செய்யும். வியர்வையையும், சிறுநீரையையும் பெருக்கும்.

நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து கஷாயமிட்டு 5 மில்லி 10 மில்லி வீதம் தினம் 2,3 வேளை கொடுத்துவர, நாட்பட்ட வாதம், மேகப்புடை, சருமரோகம், மந்தாக்கினி, அஜீரணம் இவை நீங்கும்.

வேரை உலர்த்திப் பொடித்துப் பசுவின் பால் சேர்த்து நீர் சுருக்கு முதலிய மூத்திர சம்பந்தமான வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம். மேற்படி நோய்களுக்கு நன்னாரி வேர், சீரகம் சேர்த்து குடி நீரிட்டும் குடிக்கலாம். நன்னாரி வேரை இடித்து 100 கிராம் எடுத்து ½ லிட்டர் வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதில் 750 கிராம் சீனி சர்க்கரை சேர்த்து சிறிது இட்டு எரித்துப் பதத்தில் இறக்கி, வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து உட்கொள்ள, அதி வெப்பம் தணியும், நன்னாரியை வாழை இலையில் சுற்றிக் கட்டுக் கும்பிச் சாம்பலுள் புதைத்து வைத்து எடுத்து நரம்பு நீக்கி, அத்துடன் வெல்லம், சீரகம் சேர்த்தரைத்துக் கொடுக்க மூத்திரத்தாரை ரோகம் நீங்கும்.

வேரின் இரசத்தைக் கண்ணில் விட கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நன்னாரி, அதிமதுரம், கோட்டம், வசம்பு, இவற்றைக் காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து மேல் பூசிவர, பித்தத்தால் உண்டாகும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

இதை அரைத்துத் தேனில் பாகம் செய்துன்ன, அதி பித்தம் தீரும். இதைக் கற்றாளைச் சோற்றுடன் கலந்து உண்ண வண்டுகடி போகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...