பாரதிய ஜனதாவின் தேசிய செயற் குழு அரியானா மாநிலம் சூரஜ் கண்டில் நேற்றுஇன்று தொடங்கியது . இன்றும் நாளையும் தேசிய கவுன்சில் கூட்டம் நடை பெறுகிறது.
.
கட்சியின் முன்னணி தலைவர்கள், மாநில முதலவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுபபினர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தை கட்சித்தலைவர் கட்காரி தொடங்கி வைத்தார். செயற் குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார் . பொருளாதார சீர் திருத்தத்தை பாரதிய ஜனதா எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார் .
நாட்டில் மிகப் பெரிய மாற்றம் உருவாக உள்ளது. எந்நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம் . தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எத்தனை நாட்கள் நீடிக்கும் என சொல்ல இயலாது என்றும் அவர் கூறினார்.
இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவராக நிதின்கட்காரியை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வுசெய்ய உள்ளனர். ஒரு நபர் இரண்டு முறை கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும்_வகையில் பா.ஜ.க கட்சி சட்டத்தில் திருத்தம்கொண்டுவர ஏற்கனவே ஒப்புதல் வழங்கபட்டுள்ளது .
கட்காரியின் பதவிவரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து அவரை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்க கட்சிசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான தீர்மானம் மும்பையில்_நடந்த தேசிய செயற் குழு கூட்டத்தில் ஏற்க்கனவே நிறைவேற்றப் படட்து. இதைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் கட்காரி இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா தலைவராவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.