மகாராஷ்டிரா ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்றுகட்சிகள் இணைந்து மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்திவந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க் கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்ததலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கியிருந்த அவர், தனக்கானபலம் அதிகரிக்க அதிகரிக்க அசாம் மாநிலம் கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இடம்பெயர்ந்தார். 9 அமைச்சர்கள் உட்பட 36 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத்ஷிண்டே விற்கு ஆதரவு வழங்கினர்.

வெறும் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்திற்கும் குறைவான அமைச்சர்கள் கொண்டு ஆட்சி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிவசேனாவின் தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ்தாக்கரே தடுமாறி வருகிறார். தங்களது கூட்டணி தொடரும் என காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தெரிவித்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீட்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான பதவிபறிப்பு உள்ளிட்டவை செய்தும் அது பலனளிக்கவில்லை

இதற்கிடையில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சி உச்ச நீதிமன்றத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள நிலையில் புதுவேகம் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள்குறித்து யோசனை செய்துவருகிறார். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைபிடிக்கும் முனைப்பில் உள்ளது.

இன்று பிற்பகல் அவசரமாக டெல்லிவிரைந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை நடத்திவருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைவது அவர்களுக்கான மந்திரி பொறுப்புகள், ஏக்நாத் ஷிண்டேவிற்கான முக்கியப்பதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப் படுவதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும்மீண்டும் சொல்வது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்ததுதவறு என்பதுதான். எனவே அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகஇருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...