சமையல் கேஸ் விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம்

 சமையல் கேஸ் விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம்  சமையல் உருளை விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.
.
சமீபத்தில்தான் மத்திய அரசு மானிய விலை சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது . இந்த நிலையில் மானிய விலை

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.11.42 க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் ஏஜென்சிகளுக்கு வழங்க கூடிய கமிஷனை உயர்த்துவதற்காக இந்த விலைஉயர்வு அமல்படுத்தப் படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் அறிவித்தன. இதனால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.386.50ல் இருந்து ரூ.398 ஆகியுள்ளது. வருடத்துக்கு 6 சிலிண்டர்களுக்குமேல் வீடுகளுக்கு சப்ளைசெய்ய வேண்டுமானால், கூடுதல் சிலிண்டர்கள் சந்தை விலையில் தான் வினியோகிக்கப்படும். இந்தசிலிண்டரின் விலையும் ரூ.12.17 உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் கேஸ்சிலிண்டர் விலை உயர்வுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக பா.ஜ.க,வின் மகளிர் அணி தலைவர் ஸ்மிருதிஇரானி தெரிவித்துள்ளார். இந்தபோராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என அவர் கூறினார் . வரும் 12ம் தேதி இந்தபோராட்டம் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...