மறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் ?

 மறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் ? கேள்வி : அது ஒரு பித்தலாட்டம். நிரூபிக்க முடியாத மூடநம்பிக்கை.

பதில் : மறு ஜென்மத்தை கிறிஸ்துவர்களும், இஸ்லாமும் நம்புவதில்லை. அவர்களின் புனிதநூல்களின் படி, அந்த பிறவியில் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படி அவர்களுக்கு, இறுதி நாளில்

தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவன் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படிதான், இறுதிநாளில் அவனுக்கு சுவர்கமோ, நரகமோ கிடைக்கிறது.

இப்போது நாம் முதலில் இறைவன் பார்பட்சம் உள்ளவனா, இல்லையா என்பதை பார்த்தாக வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் நல்லது செய்துவிட்டு மற்றவருக்கு தீங்கு செய்பவன் இறைவன் ஆவானா ? அப்படி பாரபட்சம் காட்டுபவனை அனைத்து உயிர்களுக்கும் இறைவன் என்று கொள்ள முடியுமா ? நிச்சயமாய் முடியாது தானே ? இறைவன் அனைவருக்கு சரிசமமானவன் தானே ? யாருக்கேனும் மாற்றுக் கருத்து உள்ளதா ?

இப்போது நாம் பிறக்கும் குழந்தைகளை பார்ப்போம். ஒரு  குழந்தை ஆரோக்கியமாய் பிறக்கிறது, மற்றொன்று பிறக்கும் போதே நோய்வாய் பட்டு பிறக்கிறது. ஒன்று செல்வந்தனாய் பிறக்கிறது, மற்றதோ தரித்திரத்தில் பிறக்கிறது. ஒன்று அழகாய் பிறக்கிறது, மற்றொன்று அசிங்கமாய் பிறக்கிறது. நாம் இப்பிறவியில் செய்யும் நல்லது கெட்டதிற்கு ஏற்றபடிதான் நமக்கு இறுதி தீர்ப்பில் நியாயம் கிடைக்கும் சரி. ஆனால் நாம் எதுவுமே செய்யாத நம‌து பிறப்பின் ஆரம்பத்தில், எப்படி இறைவனுக்கு பாரபட்சம் வந்தது ? ஒரு ஓட்டப்பந்தயம் என்று வைத்துக் கொண்டால் கூட அனைவரையும் ஒரே கோட்டிலிருந்து தானே ஓடச் சொல்லுவார்கள் ?

இறைவன் அப்பழுக்கற்றவன், இறைவன் நியாயவான், இறைவன் சத்தியத்தின் அடையாளம் என்று நாம் நம்புவோம் என்றால். அவன் நிச்சயமாய் பாரபட்ட்சம் அற்றவன் அல்லவா ? ஒரு உயிருக்கும் மற்ற உயிருக்கும் இடையே பிறக்கும் போதே ஒர வஞ்சனை செய்பவன் இறைவன் ஆக முடியுமா ? ஆப்ரகாமிய மதங்களின் வாதங்கள் இங்கே தவிடு பொடியாவதை நீங்கள் கண்கூடக் காணலாம். அவர்களால் இதைப்பற்றி விளக்கவே முடியாது.

ஆக நாம் முன்பு செய்த ஏதோ ஒன்றுக்காகதான் நாம் இவ்வாறு வித்யாசமான உடல்களை அடைகிறோமே தவிர அது இறைவனின் பாரபட்சமான விருப்பமும் அல்ல, அல்லது படைப்பும் அல்ல.

ஹிந்து தர்மம் இதை தெளிவாக சொல்கிறது. நீ செய்யும் கர்ம வினைப்படி உன் ஆத்மாவானது அதற்கு ஏற்ற உடலை அடைகிறது. இது ஒரு பிரபஞ்ச தர்மம். ஆண்மாக்கள் இந்த கர்மபந்தம் என்கிற வினைப்பயனைக்கு ஏற்றவாறே அதற்குரிய யோனிகளில் புகுகிறது. எதை நோக்கி எண்ணங்கள் அதிகமாய் லயிக்கிறதோ, அந்த எண்ணங்களை பூர்த்தி செய்துக்கொள்ளும் உடலை நோக்கியே நம் ஆண்மா பயனிக்கிறது.

உதாரணத்திற்கு காம இச்சையையே சதா சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மனம் கொண்ட ஒருவனின் ஆத்மா, அவ்விதமான் செயலில் சதா ஈடுபடக்கூடிய உடல்களை (நாய், பன்றி) அடைந்து விடுகிறது. உண்பதையும், ருசிப்பதையுமே அதிகமாக‌ புனரும் விருப்பம் உள்ளவர்கள் அதற்குரிய உடல்களை ( ஆடு, மான்) அடைகிறார்கள். ஒவ்வொரு விதமான உயிர்களின் உடலும் ஒவ்வொரு விதமான குணாதிசியங்களை அடிப்படையாக‌க் கொள்வதை நாம் பார்க்கலாம்.

இறப்பின் போது எவன் என்னை நினைக்கிறானோ அவன் என்னை அடைகிறான் என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். சிலர் அப்படியென்றால், எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்தால் போதுமே என்று நினைக்கலாம். ஆனால் ஒருவன் தன் வாழ்க்கையில் எதன் மேல் அதிகம் பற்று வைத்துள்ளானோ அதை குறித்துதான் அவன் இறக்கும் தருவாயில் நினைப்பான். சதா சொத்தையும் சுகத்தையும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் இறக்கும் தருவாயில், அந்த சொத்துக்களையும் சுகங்களையும், நினைத்துக்கொண்டேதான் சாவான். ஆனால் இறைவன் மேல் எப்போதும் எண்ணத்தை செலுத்தும் மனதை கொண்டவன், இறக்கும் போதும் அவனையே நினைவு கொள்கிறான் அவனையே அடைகிறான்.

ஐ ஏ எஸ் பரிட்சை, ஐ ஏ எம் பரிட்சை, சி.ஏ, ஐ ஐ டி, போன்ற கடிணமான பரிட்சைகளை கேள்விப் பட்டிருப்பீர். ஆனால் இறைவன் பிறக்கும் போது நமக்கெல்லாம் வைப்பதாக இவர்கள் சொல்லும் பரிட்சைதான் மிக கடிணமானது.

 

பூர்வ ஜண்மத்தை குறித்த என் பதிவை படித்துவிட்டு, ஒரு கிறிஸ்துவர் சொல்கிறார். "எந்த குழந்தைவும் பிறக்கும் பொது அது நல்ல குழந்தை தான் என்று.

ஐயா, நீங்கள் சொல்வது எப்படி சரியாகும் ? எய்ட்ஸ் மற்றும் புற்று நோயுடன் பிறக்கும் ஒரு குழந்தையும், ஆரோக்கியமான அழகான செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த குழந்தையும் ஒன்றாகி விடுமா ? இறைவன் கொடுத்த அறிவை கொஞ்சமாவது பயன்படுத்துங்கள்.

அதன் பிறகு, இது இறைவனின் சித்தம், எல்லாம் அவன் நடத்தும் நாடகம், அவன் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று மனநோயாளிகளைப் போல் பேசாதீர்கள்

இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை //

அடுத்து ஒரு இஸ்லாமிய நன்பரின் விளக்கம். எல்லா விரல்களும் ஒன்றாக இருப்பதில்லையே ? குழந்தைகள் பல விதமாய் பிறப்பது பாரபட்சம் இல்லையாம், அது இறைவன் நமக்கு வைக்கும் பரிட்சையாம்.

விரல்களின் உயரங்கள் எல்லாம் ஒன்றாக இருப்பதால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் ஒரு விரலில் மட்டும் ஏதாவது கோளாறு வந்து மற்றதில் வரவில்லை என்றால் நிச்சயம் ஏதோ காரணம் இருக்கிறது.

அல்லா பரிட்சிப்பதற்காக சிலரை செல்வத்துடனும், சிலரை ஏழையாகவும் படைக்கிறாராம். இதைதான் நான் முதலிலேயே சொன்னேன், மனநோயாளிகள் போல் இந்த நாடகம், பரிட்சை என்ற கட்டுக்கதைகள் எல்லாம் வேண்டாம் என்று.

ஒன்றும் செய்யாத ஒரு குழந்தையை குஷ்ட ரோகத்தில் பிறக்க வைத்து மற்றதை நன்றாக படைக்கும் அவன் இறைவனா ? அப்படி பாரபட்சம் செய்து விளையாடும் அவனை வணங்குவது எத்தனை முட்டாள்தனம் ?
அவன் பரிட்சை செய்து பார்த்து தெரிந்து கொள்வ‌தற்கு நாம் என்ன சோதனை கூடத்தில் இருக்கும் எலிகளா ? அதை தெரியாமல் பரிட்சை செய்து பார்க்கும் அவன் என்ன அடி முட்டாளா ? தயவுசெய்து கட்டுக் கதைகளை தள்ளி வைத்து விட்டு உங்கள் அறிவை கொண்டு பதில் சொல்லுங்கள்.

மனநோயாளிகளே, ஒரு குழந்தை மோசமான நிலமையில் பிறந்தால் அது இறைவனின் பரிட்சை என்கிறீர்களே. அப்போது ஏன் வறுமையின் பெயரில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள், வறுமை என்பது இறைவனின் பரிட்சை என்று பேசாமல் இருக்கலாம் அல்லவா ?

ஏன் மருத்துவமனைக்கு நோய்வாய் பட்ட குழந்தைகளை எடுத்து செல்கிறீர்கள் ? ஏன் குறை ப்ரசவத்தில் சாக இருக்கும் குழந்தையை காப்பாற்ற மருத்துவமனை செல்கிறீர்கள் ? இறைவனின் பரிட்சைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்களா ?

உங்கள் கூற்றுபடி இறைவன் ஒரு பரிட்சை நடத்துகிறான் என்றால் அதில் அர்த்தம் இருக்கும் அல்லவா ? அந்த அர்த்தத்தை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள் ?

இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை.

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...