ராஜஸ்தான், டெல்லி, ம.பி., சத்தீஷ்கார், மிசோரம் உள்ளிட்ட 4 மாநில சட்ட சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல்பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் சட்ட சபைக்கு வருகிற 11–ந் தேதியும், 19–ந் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்த மாநிலத்தில் வருகிற 7–ந் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், குஜராத் முதல்–மந்திரியும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். சோனியாகாந்தி அன்று சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள கண்டகோன், தோங்கர்கார் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல்பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்கிறார்.
அதேநாளில் நரேந்திர மோடி ஜக்தால்பூர், கங்கர் ஆகிய ஊர்களில் பிரசாரம்செய்கிறார். தோங்கார்காரிலும் அவர் பிரசாரம்செய்ய திட்டமிட்டு உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி 9–ந் தேதி கஸ்தோல், பிலாஸ்பூர், படபாரா ஆகிய ஊர்களில் நடைபெறும் தேர்தல்பிரசார கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.