உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 2௦௦௦ – 3௦௦௦ ஆயிரம் பேர் உலகெங்கும் இந்த எலும்புகொடை நடவை (எடுத்துப் பொருத்தலை) செய்து கொள்கின்றனர். இது, இதய மாற்று அறுவை சிகிச்சை (Heart Transplant) செய்து கொள்வோர் எண்ணிகையை விடவும் 1௦௦ மடங்கும், சிறுநீரக மாற்று (Kidney Transplant) செய்து கொள்வோரை விட 25 மடங்கு அதிகம்.
எலும்புக்கொடை இன்று வெகு வேகமாக விரிந்து வரும் ஒரு துறை, அதைப் பெற்றுக் கொள்ளும் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை இது உயர்த்துகிறது. எலும்பு மூட்டு முடநீக்கியல் துறை (Orthopaedic Surgery) யிலும், நரம்பியல் அறுவைத் துறை (Neuro Surgery) யிலும் இது பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
எலும்பு வங்கி என்பது ஒரு புதுவகையான வங்கி. இங்கே எலும்புகள் வகை வகையாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. உலகெங்குமுள்ள நோயாளிகளுக்கு இது இன்று நம்பிக்கை வெளிச்சம் தரும் ஒரு மருத்துவப் பரிசாகும்.
எலும்புக் கட்டிகள் (Bone Tumours),எலும்புத் தொற்றினால் இறந்து போன எலும்புகள் (Sequestrum from Osteomyelitis) நீக்கப்பட்டு அதனால் வரும் வெற்று இடைவெளிகள் (Bone gaps), முதுகு முள்லெளும்புங்கள் உடைவு (Vertabral fractures),மண்டையோட்டு ஞெகிழி அறுவை(Cranioplasty), முகச் சீரமைப்பு அறுவை (Fasciomaxilary Surgery) போன்ற சூழ்நிலைகளில் இந்த இடைவெளியை நிரப்ப எலும்பு ஒட்டு (Bone Graft) பயன்படும்.
இந்த அறுவைகளின்போது நோயாளியின் உடலிலுள்ள சொந்த எலும்புகள் மட்டுமே போதாமல் போகலாம். அப்போது ரத்த வங்கி கை கொடுக்கும். மேலும் நோயாளிக்கு உடலில் இதற்கு இரண்டு இடங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இதனால் ரத்த இழப்பும் அதிகமாகலாம். இவற்றையெல்லாம் தவிர்த்துவிட உதவுகிறது எலும்பு வங்கி. இளம் வயதினர் மற்றும் வயதேறிய நோயாளிகளுக்கும் இது மிகவும் பயன்படுகிறது.
ஆனால், இந்த எலும்பு ஓட்டை தயாரிப்பதில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். அதை வேதிய முறைப்படி தூய்மைப்படுத்த வேண்டும் (Chemically treated – Sterlilised with Ethylene Oxide)அதிலுள்ள எதிர்ப்புத்தன்மை (Antigenicity) நீக்கப்பட வேண்டும். அதைத் தொற்றுநீக்கி(Sterlilization) அந்த எலும்பின் தட்டுக்கு உயிர்க்காலமாகிய (Shelf life) 6-8 மாதங்கள் வரை அதைப் பதனிட்டுக் காக்க வேண்டும்.
எனவே, இந்த எலும்புக்கொடை(Bone Donation) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் வெகுவாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் எலும்பு வங்கியில் பணியாற்றுவோருக்கும் நல்ல போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
எலும்புக்கொடை எங்கிருந்து வருகிறது?
(Where does Bone come from?)
இறந்த பிறகு தங்களது எலும்புகளை நன்கொடையாக தம் சொந்த முழு விருப்பத்தில் கொடை தர எழுத்து மூலம் உறுதி தருபவர்களிடமிருந்து இது கிடைக்கிறது.
முழுஇடுப்பு மாற்று அறுவை, (Total hip replacement) முழுமுழங்கால் மூட்டு அறுவை (Total knee replacement) சிகிச்சைகள் செய்து கொள்வோரும் தங்களிடமிருந்து நீக்கப்பட்ட எலும்பின் பகுதிகளைக் கொடையாகக் கொடுக்காலாம். எலும்புக்கொடை அறுவை அரங்கத்திலிருந்தோ (Operation theatre) அல்லது உடல் கிடங்கிலிருந்தோ (Mortuary) பெறலாம்.
ஆனால், ஈதக்குறி நோய் (AIDS), புற்றுநோய் (Cancer ), ஈரல் அழற்சி(Hepatitis) போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட்டவர்களிடமிருந்து எலும்புக்கொடை பெறக்கூடாது.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.