மும்பையில் லோக்சபாதேர்தலை முன்னிட்டு, வரும் 22ல் மகாகர்ஜனை என்னும் மகாபேரணியை கூட்ட பா.ஜ.k.,திட்டமிட்டுள்ளது.இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்த பாஜக., தலைவர் ராஜ்நாத் சிங் முடிவுசெய்துள்ளார். அதற்காக நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களையும் கவர முக்கிய ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இதற்கான ஆலேசானைகூட்டம் நேற்று நடந்தது.
மகாராஷ்டிராவில் பாஜக.,வின் செல்வாக்கை உயர்த்த கிராமப் புறங்களில் உள்ள மக்களும் இப்பேரணியில் பங்கேற்க முக்கிய ஆலோசனை செய்யப் பட்டுள்ளதாக பா.ஜ.க., வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த மகாபேரணியில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் , பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி , கட்சியின் முன்னாள் தலைவர் நிதின்கட்காரி மற்றும் கட்சி தலைவர்கள் கோபிநாத்முண்டே , ஏக்நாத்,வினோத் , ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் பங்குபெறுகின்றனர்.
பேரணியில் மாநிலம்முழுவதும் இருந்து ஆர்வலர்கள் பங்குபெரும் வகையில் ரூடி, போதுமான நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளார்.மேலும் மகாராஷ்டிரா பாஜக.,தலைவர் தேவேந்திரபத்நவிஸ் கூறுகையில், மாநிலத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்து மக்கள் இந்தபேரணியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் அடித்தட்டு ஆர்வலர்கள் அதைபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.சமீபத்தில் மோடிபங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்லவரவேற்பு இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக.,விற்கே வெற்றிவாய்ப்பு சாதமாக கருத்துகணிப்பு தெரிவிக்கிறது என்றார் .
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.