உள்துறை அமைச்சகம் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக கடந்த 30ம் தேதி டில்லிக்கு சென்றார் தமிழக முதல்வர் கருணாநிதி,இந்த பயணத்தில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க படும் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிடும் என்று கருதப்பட்டது ,
ஆனால் அங்கு நிலைமையோ வேறுமாதிரி சென்றுகொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
தமிழக முதல்வர் கருணாநிதி தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சோனியா காந்தியை சந்தித்ததாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி , அகமது படேல் ஆகியோர் உடன் இருந்ததகவும் . அப்போது நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் , காங்கிரசுக்கு 80 தொகுதிகளும் . ஐந்து அமைச்சர் பதவிகளும், துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும்’ என்று , ராகுல் காந்தியின் விருப்பத்தை சோனியா காந்தி தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் கருணாநிதி எந்த பதிலையும் கூறாமல் அமைதியாக இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராத வகையில், அதிகமான தொகுதிகளும் , துணை முதல்வர் பதவியும் காங்கிரஸ் கேட்டது முதல்வருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாளை சென்னையில் நடக்கவுள்ள திமுக.வின் பொதுக்குழுவில் காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு எடுக்கபடும் என தெரியவருகிறது
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.