சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனைய மாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகெளடா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்குவது குறித்து தெற்குரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் சதானந்த கெளடா வெள்ளிக் கிழமை ஆய்வு செய்தார்.
ராயபுரம் ரயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு மாற்றாக ரயில் முனையமாக்க விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். அதற்காக முதல்கட்டமாக ரூ.200 கோடி செலவில் ராயபுரம் முதல் அத்திப்பட்டு வரை நடை மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தநிலையில், ரயில்வே அமைச்சர் சதானந்தகெளடா வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் ராயபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிபார்த்தார். அங்கிருந்த ரயில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து, தெற்குரயில்வே அதிகாரிகளுடன் திட்டவரைவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியது: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்குவது குறித்து ஆய்வுசெய்ய வந்தேன். முனையம் அமைப்பதற்காக இடங்கள் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து தேவையான இடங்களை கேட்டுப்பெற்று பணிகளை விரைவில் தொடங்குவோம்.
மேலும் தமிழக முதல்வருக்கு இது குறித்து கடிதம் எழுதப்படும். ஆனால் முனையமாக்கும் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற காலவரம்பெல்லாம் தெரிவிக்கக் கூடியசூழல் இப்போது இல்லை என்றார்
மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கம்பியில்லா இணையசேவையை ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்குரயில்வே தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் மனோகரன், சென்னைக் கோட்டமேலாளர் மிஸ்ரா, ரயில் நிலைய மேலாளர் கோவிந்த சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில்டெல், இந்த சேவையை அளிக்கும். இதன்மூலம் சென்ட்ரலுக்கு வரும்பயணிகள் தடையின்றி இணையதள சேவைகளை தங்கள் மடிக்கணினி, செல்பேசிகளில் பெறமுடியும். இந்தச் சேவை இப்போது பரிசோதனை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. முதல் 30 நிமிஷங்களுக்கு இந்தச்சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர், கட்டணம்செலுத்தி பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.