ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம்மாநிலம் குவாஹாட்டி, மேகாலயத்தின் மெண்டிபாதரை இணைக்கும் ரயில்சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். குவாஹாட்டியில் நடைபெற்ற தொடக்கவிழாவில் அவர் பேசியதாவது:
ரயில் நிலையங்களை ஏழை, நடுத்தரமக்களே அதிகம் பயன்படுத்து கின்றனர். ஆனால் ரயில் நிலையங்களின் தரம் திருப்திகரமாக இல்லை. விமான நிலையங்களை போன்று ரயில் நிலையங்களும் தரம் உயர்த்தப்படவேண்டும்.
அதற்கு ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது . அப்போது தான் ரயில் நிலையங்கள் நவீனமாகும்.
ரியல் எஸ்டேட்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை ரயில்வேதுறை சாதகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்கலாம். இதன் மூலம் ரயில்வேக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வேதுறை முதுகெலும்பாக விளங்கி வருகிறது. ஒருரயிலில் கூடுதலாக ஒருபெட்டியை இணைப்பது மூலமோ, ஒருரயில் நிலையத்தை தரம் உயர்த்துவது மூலமோ பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது. அனைத்து ரயில் நிலையங்களும் உலகத்தரத்துக்கு இணையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அப்போது இந்திய பொருளாதாரத்தின் என்ஜினாக ரயில்வே துறை உருவெடுக்கும். 100 ஆண்டுகளுக்கு முன் எத்தகைய வசதிகளை கொண்டிருந்ததோ, அதேபோல் தான் தற்போதும் உள்ளன.அந்நிலையை மாற்றி, நவீன வசதிகளை ஏற்படுத்தி தர, ரயில் நிலையங்கள் தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, நாடு தழுவிய அளவில், 10 முதல், 12 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்.
ரயில்வே துறையை நவீனமய மாக்க 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. நாட்டின் முக்கியபகுதிகளில் 4 ரயில்வே பல்கலைக் கழகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரயில்வேதுறை சார்ந்த அனைத்து தொழில் நுட்பங்களும் கற்றுத் தரப்படும் என்றார்..
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.