கோத்ரா சபர்மதி-எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 31 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்-தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது .
கடந்த 2002ம் ஆண்டு, உ.பி.யிலிருந்து அயோத்திக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக விஸ்வ இந்து
பரிஷதை சேர்ந்தவர்கள் குஜராத் மாநிலத்துக்கு வந்து கொண்டு இருந்தனர். அந்த ரயில் கோத்ரா-ரயில் நிலையத்தில் வந்து நின்றது அப்பொழுது அதில் இருந்த எஸ்-6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கபட்டது . இதில் அதில் இருந்த 59 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கடந்த 22ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . இதில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்தது . இந்த நிலையில் 31பேர் மீதான தண்டனையை நீதிபதி ஆர்.ஆர்.படேல் அறிவித்துள்ளார். அதன்படி 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
{qtube vid:=EwCLd3iye0o}
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.