அறுசுவை உணவின் பயன்

 உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு இந்த ஆறு சுவைகளிலும் உடலுக்குச் சக்தி அளிக்கும் தன்மை உண்டு.

கசப்பு:
உடல், எலும்பு மற்றும் நரம்பின் வலிமையால் இயங்குகிறது. உடலை இயக்குவதும், மனத்தின் எண்ண அலைகளை இயக்குவதும், மூளையை இயக்குவதும், நரம்புகள்தாம். உடலுக்கு ஏற்றவாறு நரம்பு பலம் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக இருப்பாகள்.

நரம்புக்குப் பலத்தைத் தருவது கசப்புச் சுவையே. உடலில் தேவையான அளவு கசப்புச் சுவை இருக்க வேண்டும். உடலின் எல்லா உறுப்புகளும் உறுதியடையப் பயன்படுவது கசப்புச் சுவையே ஆகும்.

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கடுகு, அளவான கசப்புச் சுவை உடையது. உடலிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் திறன் உள்ளது. அதனால்தான் நம் முன்னோர் முறையாக உணவில் பயன்படுத்தச் செய்தனர். உணவிற்குப்பின் சீரகம் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தினர். சீரகம் உடல் உள்ளுறுப்புகளுக்கு முறையாகச் சக்தியளிக்கிறது.

கசப்புச்சுவை உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அளவுடன்தான் உண்ண வேண்டும். உடலின் தேய்மான உறுப்புகளைப் புதுபிக்கும் ஆற்றல் கசப்புச் சுவைக்கு உண்டு.

சீரணத்துக்கு உதவியாய் இருக்கும். அத்துடன் கிருமிகளை அழித்து, எலும்பும் தசையும் உறுதியுடன் இருக்கவும், உடலைப் பாதுகாக்கும் பணியைச் செய்வதற்கும் உதவுகிறது. கசப்புச்சுவை குறைந்தால், செய்யும் பணியில் ஆர்வம் குறைந்து சோம்பல் உண்டாகும். அடிக்கடி தலைவலி, அத்துடன் உடல் வலிமைக் குறைவும் உண்டாகின்றன.

கசப்புச்சுவை அளவிற்கு அதிகமானால், அதிக உணர்ச்சி வசப்படுதல், சினம், தூக்கமின்மை, தோல் சம்பந்தமான ஊறல், அரிப்பு பிணிகள் உண்டாக்கும். கத்தரிக்காய் அளவுக்கு அதிகமாக உண்டால் கூடச் சிலருக்கு ஊறல், அரிப்பு உண்டாகும். அவர்கள் இளநீரை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

உடல் உயரத்திற்கேற்ற எடையைவிட, அதிக உடல் எடையினாலும், அளவுக்கு அதிகமான இரசாயன மருந்துகளைப் பயன்படுத்தினாலும், மற்றும் ஒவ்வாமையினாலும் தோல் சம்பந்தமான வியாதிகள் அன்புடன் விலகாமல் இருக்கும்.

கசப்புச்சுவை உள்ள எள், எள்எண்ணெய், கடுகு, கடுகெண்ணெய், கசகசா, ஓமம், சீரகம், பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தூதுவளைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்காய், முருங்கைக் கீரை, கோவைக்காய், பாகற்காய், சுண்டைக்காய், பிஞ்சுக் கத்தரிக்காய், வேப்பம்பூ, ஆவாரம்பூ, கரிசலாங்கண்ணி, முடக்கத்தான் கீரை, முசுமுசுக்கை, வேப்பிலை ஆகியவற்றை அளவுடன் பயன்படுத்தலாம்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...