நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தை தேசநலன்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பயன் படுத்துகிறது

நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தை தேசநலன்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பயன் படுத்துவதாகவும், அக்கட்சியின் சுய நல அரசியலுக்காக நாட்டின் வளர்ச்சியை பணயம் வைப்ப தாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

 நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிபிஐ-யை மத்திய அரசு ஏவுவதாகக்கூறி, அக்கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

 இந்நிலையில், நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

 நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், அவை நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

 மேலும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 12ம் தேதி முதல், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், இளைஞர்களின் மேம்பாட்டுக்கான ஆளுமைத்திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

 காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியல் காரணமாக, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு, அக்கட்சியின் குறுகிய மனப் பான்மை உடைய சுயநல அரசியலே காரணமாகும்.

 தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டுநடத்தியதற்காக, பிரதமர் மோடி மீது கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்துக்கும் பிரதமரைக் குற்றம்சாட்டுவது, தற்போது வழக்கமாகி விட்டது. யாருக்காவது வயிற்றுவலி ஏற்பட்டாலும், பிரதமர் மோடிதான் காரணம் என்று கூறுவார்கள் போலும்.
 நாடாளுமன்ற செயல் பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக, பிரச்னைகளையும், பொய்களையும் உருவாக்கி போலியான சண்டைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது என்றார் நக்வி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...