பாஜக யாரோடு கூட்டணி10 நாட்களுக்குள் அது தெரியவரும்

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பாஜக. செயல் வீரர்கள் கூட்டம் செங்கல் பட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாஜக தேர்தலுக்கான தயாரிப்புகளை தொடங்கிவிட்டது. வாக்குச் சாவடி பகுதி அளவில் அமைப்பை பலப்படுத்து வதற்கான முயற்சியை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டோம். எந்த கூட்டணி வந்தாலும் அடிப்படையாக பணி நடக்கபோகிறது.

சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். 234 தொகுதிகளுக்கும் நேரில்சென்று ஆய்வு செய்வதற்காக மாநிலத்தில் 10 குழுக்கள் நியமிக்கபட்டு தலா ஒவ்வொருவருக்கும் தலா 24 தொகுதிகள் பிரித்து தரபட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் எங்களோடு கூட்டணிவைத்த கட்சிகள் எங்களோடு கூட்டணியில் இல்லை என்று சொல்லவே இல்லை. சிலகருத்துக்களை முன்வைத்தார்கள். அதை நாங்கள் குறித்துகொண்டோம். அந்த கருத்துக்களை எங்களது அகிலபாரத தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் கொச்சிக்கு அகில பாரத தலைவர் அமித் ஷா வந்திருந்த போதும் இதுகுறித்து நாங்கள் கருத்து சொன்னோம். கூட்டணி குறித்து நாம் கவலைப்பட வேண்டாம் தமிழக பாஜக யாரோடு கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற முடிவை மத்திய தலைமை விரைவில் அறிவிக்கும். 10 நாட்களுக்குள் அது தெரியவரும்.

காங்கிரஸ், திமுக. 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்திருக் கிறார்கள். நடுவில் ஒருசில காரணங்களுக்காக பிளவு ஏற்பட்டது. மீண்டும் சேர்ந்திருக் கிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் சேரும்போது மகிழ்ச்சி ஏற்படுவது. சகஜம் தான் இப்போது சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை. இது இயற்கையானதுதான்.

பாஐக. பொருத்த வரையில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை யாருக்கும் தோன்றவில்லை. சுப்பிரமணிய சுவாமி ஒருகருத்தை சொன்னது விவாதத்தை கிளப்பியது என்பது உண்மைதான் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...