தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிகத்தில் பா.ஜ.க வலுவான கட்சியாக மாறிவருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடுசெய்தது போக மற்ற தொகுதிகளில் பா.ஜ.க வலிமையுடன் போட்டியிடும். பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க மேலிட தலைவர்கள் அடுத்தமாதம் தமிழகம் வருகிறார்கள்.
படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு ஏற்கமுடியாது. கச்சத்தீவு, சேதுசமுத்திர திட்டம் குறித்த திமுக.வின் அறிவிப்பையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
திமுக. தேர்தல் அறிக்கை மக்களிடம் எந்தவித தாக்கத் தையும் ஏற்படுத்தாது. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தே.மு.தி.க. எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.