அடுத்த பொங்கல் ஜல்லிகட்டோடு

ஜல்லிகட்டு நடைபெறுவதற்கான ஒரு புதிய சட்டத்தை ஏற்கனவே இருக்கும் தடையை நீக்கும் அளவிற்கு ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்த மசோதா மழை கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  ஏற்கனவே சென்ற பொங்கலுக்கே ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்றும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜல்லிகட்டு என்பது வீரவிளையாட்டு என்பதை அங்கீகரித்து மத்திய அரசு ஒரு சட்ட அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் விலங்கின வாரியத்தை சார்ந்தவர்களும் மற்றும் பலரும் அதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை ஏற்படுத்திவிட்டார்கள்.  ஆக மத்திய அரசு தமிழர்களுக்கான வீரவிளையாட்டு நடைபெற வேண்டும் என்றும் ஜல்லிகட்டு தடை நீங்கி நிரந்தரமாக நடைபெற வேண்டும் என்றும் இந்த ஒரு சட்ட திருத்தத்தையே கொண்டு வந்து அதன் மூலம் ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு சட்ட அமைச்சகம், சட்ட திருத்தத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.  இதன் மூலம் Prevention of cruelty at 1960ல் என்ற சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து ஜல்லிகட்டு என்பது விலங்கு வதை கிடையாது அது ஒரு வீரவிளையாட்டு, அது ஒரு கலாச்சார விளையாட்டு என்ற திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதே நமது அடுத்த பொங்கல் ஜல்லிகட்டோடு நடைபெறுவதற்கு மத்திய அரசு வழிவகைச் செய்திருக்கிறது.  ஏற்கனவே ஜல்லிகட்டுக்கு தடை விதித்த வழக்கு, ஆகஸ்டு 1-ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் வர இருக்கின்ற நிலையில் இன்று இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்து மழை கால கூட்டத் தொடரில் இந்த புதிய மசோதாவை நிறைவேற்றுவதற்கான வழிவகை செய்திருக்கும் மத்திய அரசுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.  தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய மோடி தலைமையிலான அரசு உண்மையாக மதிப்பளிக்கிறது என்பதும் தமிழ் கலாச்சாரத்திற்கு பிரதமர் அவர்கள் துணை நிற்கிறார் என்பது தெளிவாகிறது.  கட்சி எல்லை கடந்து நம் பாரத பிரமருக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது.

அதே போல Madras high court என்பதை சென்னை உயர்நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்தது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.  இதன் மூலம் தமிழகத்தின் மீது அக்கறையும், பாசமும் கொண்டது மத்திய அரசு என்றும், நம் மாநிலத்திலிருந்து வைக்கும் கோரிக்கைகளை நியாயத்துடன் பரிசிலிக்கும் அரசாக மத்திய அரசு திகழ்கிறது என்பது நிருபணமாகிறது.  இதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

நன்றி  டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநிலத் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...